அரசியல்

தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து 14 ம்தேதி காங்கிரசார் பேரணி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகயை கண்டித்து வரும் 14 ம்தேதி, டெல்லியில், பாரதத்தை காப்போம் எனும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை, தவறுதலாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகிய மோசமான மத்திய அரசின் கொள்கைகளால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை கண்டித்து டெல்லியில் வரும் 14 ம் தேதி பாரதத்தை காப்போம் எனும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாகவும், இதில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் கூறினார்.

Show More

Related News

Back to top button
Close