தேசம்

நாராயணசாமிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சஸ்பெண்ட்

புதுச்சேரியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுவை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு, கவர்னர் கிரண்பெடியை சந்தித்து குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கினார். இதுபற்றி சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்குமாறு அவரை கவர்னர் கிரண்பேடி  அறிவுறுத்தினார். கட்சியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக செயல்படும் தனவேலு எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கட்சி மேலிடத்திடம் தெரிவித்து தனவேலு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் தெரிவித்தனர். இதன்படி தனவேலு விவகாரம் குறித்து அவர்கள் கட்சித் தலைமையிடம் விவாதித்தனர். இந்த நிலையில், தன்வேலு எம்.எல்.ஏ கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். 7 நாட்களுக்குக்குள் தனவேலு விளக்கம் தரவேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்  நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Show More

Related News

Back to top button
Close