தமிழ்நாடு

வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் முறையாக தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மருங்கூர் கிராமத்தில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த  500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வெலிங்டன் ஏரியிலிருந்து, வரும் பிரதான பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், மருங்கூர் ஏரிக்குச் செல்லும் வாய்க்கால்களை மட்டும் தூர்வாராமல் கிடப்பில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். அந்த வாய்க்கால்களை  தனிநபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

மருங்கூர் ஏரிக்கு வரும் நீர்வரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிக்கு வரும் நீர் அனைத்தும் அருகிலிருள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். இது  குறித்து அதிகாரிகளுக்கு பலமுறைபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பவழங்குடி-விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Show More

Related News

Back to top button
Close