ஆன்மிகம்

டிசம்பர் 02 இன்றைக்கான ராசிப்பலன்

மேஷம்;

சொந்தத் தொழில் செய்வர்களுக்கு இன்று முன்னேற்றம் கிடைக்கும்.குடும்பத்தில் அமைதி  நிலவும்.மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.சிந்தித்து பேசுவது , சிந்தித்து செயல்படுதல் நன்மையைத் தரும்.

ரிஷபம் ;

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும்.குடும்ப ஒற்றுமை மேம்படும்.அலுவலகத்தில் பணிபுரிவோர்க்கு ஃப்ரோமேஷன் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது.பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புக் காத்திருக்கிறது.

மிதுனம்;

இன்றைய நாள் உங்களுக்கு சுமரான நாளாக தான் இருக்கும்,குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் அதனை சுமுகமாக தீர்ப்பீர்கள்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.

கடகம்;

இன்றைய நாளில் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றிப் பெறும்.வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சிக் கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

சிம்மம்;

இன்று உங்களுக்கு அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்,வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.

கன்னி;

இன்றைய நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது.முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைத்துறை கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.

துலாம்;

தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும். பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது பேச்சில் கவனம் தேவை. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்;

இன்றைய நாள் உங்களுக்கு சுமாராக தான் இருக்கும்.இன்று உங்களுக்கு அலைச்சல் தரக்கூடிய நாளாக இருக்கும். கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தைக் குறைத்து கொள்வது அவசியம் கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு உடல் அசதி அதிகமாக இருந்து வரும். தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது.

தனுசு;

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் வாகன வகையில் அனுகூலம் உண்டு பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மகரம்;

இன்றைய நாள் இனிய நாள் ஆகும் மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவற்றில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கும்பம்;

இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். நிதானத்துடன் செய்ல்படுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் மாணவர்களின் கல்வி மேம்படும் உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

மீனம்;

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடைப்பெறும்.கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும்.வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.உடல் நலத்தில் கவனம் தேவை. அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை இருக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

Tags
Show More

Related News

Back to top button
Close