ஆன்மிகம்

டிசம்பர் 05 இன்றைக்கான ராசிப்பலன்!

மேஷம்;

இன்று நீங்கள் புதிய தொழில் முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். பேச்சில் நிதானம் தேவை வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். எதிர்பார்த்த தன வரவு உண்டாக சற்று காலதாமதமாகும் என்றாலும் நன்மையே நடைபெறும்.

ரிஷபம்;

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும். காதல் தொடர்பான விஷயங்களை பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும்.

மிதுனம்;

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவு பொருட்களில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் கணக்குத் துறை மருத்துவத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை தொழில் சற்று கூடுதலாக இருந்தாலும் திறனுடன் சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும்.

சிம்மம்;

இன்று உங்களுக்கு  உணர்ச்சிவசப்படக்கூடிய நாள் என்பதால் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வாய்ப்புண்டு. வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

கன்னி;

இன்றைய நாள் சற்றே உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. உடல் உஷ்ணத்தினால் நோய்நொடிகள் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்.டு எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை. சரியான தூக்கம் அளவான உடற்பயிற்சி போன்றவை இன்றைய நாளில் நல்ல பலனைக் கொடுக்கும்.

துலாம்;

நண்பர்களுக்கு செய்யும் தொழிலை மேம்படுத்தும் நல்ல நாள் ஆகும். தொழில் முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவு செய்ய கிடைக்கும். இதனால் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும்.

விருச்சிகம்;

புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்றே சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. அல்லது ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.அலுவலகத்தில் பணிபுரிவோர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

தனுசு;

இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையக்கூடிய நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் ஆகும். ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு அல்லது ஊதிய உயர்வு ஏற்படலாம். மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

மகரம்;

இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை வலுவாக ஆட்கொள்ளும். புதிய தொழில் முயற்சிகள் அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்;

இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். புதிய வேலை வாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். ஒருசிலர் புதிய மொபைல் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

மீனம்;

இன்றைய நாள் இனிமையானதொரு நாள் ஆக அமையும். தன வரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு.

Show More

Related News

Back to top button
Close