உறவுகள்லைஃப் ஸ்டைல்

தன் காதலியிடம்சண்டையே வரக்கூடாது நினைக்கும் காதலர்களுக்கு- காதலன் செய்ய வேண்டிய சில கடைமைகள்

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். கண்டிப்பாக காதலிக்க வேண்டும் என்று தெரிந்த நமக்கு எப்படி காதலிக்க வேண்டும் என்று கடைசி வரை தெரிவதே இல்லை. உங்களுக்கு பிடித்த பெண்ணை காதலிப்பது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும், நடந்து கொள்ளவும் வேண்டும்.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். கண்டிப்பாக காதலிக்க வேண்டும் என்று தெரிந்த நமக்கு எப்படி காதலிக்க வேண்டும் என்று கடைசி வரை தெரிவதே இல்லை. உங்களுக்கு பிடித்த பெண்ணை காதலிப்பது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும், நடந்து கொள்ளவும் வேண்டும்.

” சாரி, நான் உன் மெஸேஜை பார்க்கவில்லை ” என்று தெரியாமல் கூட உங்கள் காதலிக்கிட்ட சொல்லிறாதீங்க. அதுவும் ப்ளூ டிக் வந்ததுக்கு அப்புறமும் இந்த பொய்ய தொடர்ந்து சொன்னா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். பொண்ணுங்ககிட்ட ஒரு தனி ரேடார் இருக்கு அது பசங்க பொய் சொன்னா ஈஸியா காட்டிக்கொடுத்துரும்.

உங்கள் நண்பனின் காதலியை பற்றி ஒருபோதும் உங்கள் காதலியிடம் புகழாதீங்க. அப்படி பண்ணிட்டா நீங்கள் பெரிய சண்டையை தொடங்கி வைச்சுடீங்கனு அர்த்தம். உங்கள் நண்பனின் காதலியை பற்றி பெருமையா பேசுறது உங்க நண்பருக்கு வேண்டுமென்றால் பெருமையாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் நிலைமையை மோசமானதாக மாற்றிவிடும்.

” உன்னோட பிரண்ட்ஸ் பார்க்க நான் ஏன் வரணும்?” இது நீங்கள் கண்டிப்பாக கேட்கக்கூடாத கேள்வியாகும். உங்களை தங்கள் நண்பர்களிடம் காட்டி பெருமை பட்டுக்கொள்ள உங்கள் காதலி விரும்பலாம். எனவே பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உங்கள் காதலி கூப்பிடும்போதெல்லாம் அவங்களோட நண்பர்கள பார்க்க நீங்கள் கண்டிப்பாக போகணும்.

” இந்த ட்ரெஸில் நீ குண்டா தெரியுற ” இந்த வார்த்தையை கூறிவிட்டால் உங்களின் அன்றைய அனைத்து திட்டங்களும் வீணாகிவிடும். காதலிக்க தொடங்கிவிட்டால் முதலில் உங்கள் நேர்மையை ஒளித்து வையுங்கள். காதலில் பொய்தான் அழகு, எனவே நீங்கள் கூறுவது உண்மையாகவே இருந்தாலும் அதனை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு எப்போது கேட்டாலும் அழகாக இருக்கிறாய் என்று கூறமட்டும் பழகிக்கொள்ளுங்கள்.

” நான் என் பிரண்ட்ஸோட இன்னைக்கு ஜாலியா இருக்க போறேன் ” இந்த வார்த்தையை நீங்கள் சொல்வது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. இதனைக் கூறினால் உங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் ஏற்படலாம். ஒன்று உங்கள் நண்பர்களோடு வெளியே செல்வதற்கோ அல்லது குடிப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு அதனால் சண்டை ஏற்படலாம். இல்லையெனில் ” உன் பிரண்ட்ஸோட இருக்கறது ஜாலியா இருக்குன்னா அப்ப என்கூட இருக்க உனக்கு பிடிக்கலையா ” அப்படினு கேட்டு சண்டை வரும். மொத்தத்துல இந்த வார்த்தை கண்டிப்பா சண்டையை உண்டாக்கும்.

” என் முன்னால் காதலி இப்படித்தான் செய்வாள் ” இந்த வார்த்தையைக் கூறிவிட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும். உங்களுக்கு முன்னால் காதலி இருந்தால் ஒருபோதும் அவர்களைப் பற்றி உங்கள் தற்போதைய காதலியிடம் பேசவோ அல்லது இருவரையும் ஒப்பிடவோ கண்டிப்பாகக் கூடாது. இது உங்கள் முன்னாள் காதலியை இன்னும் நீங்கள் மறக்கவில்லை என்று அவர்களை உணரச்செய்யும். பிறகு ” அவகிட்டயே போய் பேசிக்க ” என்று சண்டையைத் தொடங்கிவிடுவார்கள்.

கடைசி வரை காதலியை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைக்கும் காதலர்கள் இவை எல்லாம் ஃபாலோவ் செஞ்சா  தான் உண்டு.

Show More

Related News

Back to top button
Close