தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயணம் : போக்குவரத்து கழகம் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையில் இருந்து வரும் 14 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு 30 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்துகளை முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம்  பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனவரி 10ம் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போக்குரவத்துக் கழகம், அதில், 4 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதன்மூலம் அரசுக்கு 9 கோடியே 12 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Show More

Related News

Back to top button
Close