தேசம்

65 சுங்கச்சாவடிகளில் மட்டும் தற்காலிகமாக பாஸ்டேக் விலக்கு

நெரிசலை தவிர்ப்பதற்காக பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் மட்டும் பாஸ்டேக் விதிமுறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் நெரிசலை தவிர்ப்பதற்காவும், விரைவாக சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்வதற்காகவும், முறைகேடுகளை தவிர்க்கவும் ஃபாஸ்டேக் முறை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கக்சாவடிகளில் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டப்படி வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக்கில் முறையில் கட்டாயம் சேர வேண்டும். ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நடைமுறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் 75 சதவீத பாதைகள் பாஸ்டேக் ஒட்டிய வாகனங்களுக்கும், 25 சதவீத பாதைகள் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெரிசலை தவிர்ப்பதற்காக பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள நாட்டின் 65 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஃபாஸ்டேக் விதிமுறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் விதிகள் அடுத்த 30 நாளுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. சாலைபோக்குவரத்து துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை ஏற்று இந்த முடிவினை எடுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைதுறை தெரிவித்துள்ளது.

Show More

Related News

Back to top button
Close