தமிழ்நாடு

வெள்ள அபாயத்தை எதிர்க்கொள்ள அவசர உதவி எண் : தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக அழைக்க, அவசர உதவி எண்களை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை வெளியிட்டுள்ளது.

பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தை எதிர்க்கொள்ள போதுமான மீட்புப் படகுகள், மிதவை உபகரணங்கள், நீட்டிப்பு ஏணிகள், நீளக்கயிறுகள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 தீயணைப்பு வீரர்களை கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. வெள்ளம் குறித்து தகவல் தெரிவிக்க, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 101 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் 044-28554309, 28554311, 28554313, 28554314, 28554376 உள்ளிட்ட உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தீயணைப்புத்துறை கூறியுள்ளது. சென்னையில் 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 044 – 25384520, 25384530, 25384540 ஆகிய எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related News

Back to top button
Close