தேசம்

ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி அரிசி

ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ள ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால், ஒரு கிலோ பிரியாணி அரிசி கொடுக்கும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சித்தூர் மாவட்டம் நகரியில் எம்எல்ஏ ரோஜா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பின்னர் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி அரிசி என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனத் தெரிவித்தார். பொதுமக்களிடையே இந்த திட்டம் ஏற்படுத்தும் விழிப்புணர்வை பொறுத்து, திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொடுத்து பிரியாணி அரிசியை வாங்கிச் செல்ல,  நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Show More

Related News

Back to top button
Close