தேசம்

விண்வெளி செல்லும் வீரர்களுக்கு இந்த மாதம் ரஷ்யாவில் பயிற்சி

விண்வெளி செல்லும் ககன்யான் வீரர்கள் 4 பேரின் பயிற்சி இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்குகிறது.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை இந்தியா நிறைவேற்றி சாதனை படைப்பதற்கு ரஷ்யாவும் உதவி செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகணை வாகனமான “பாகுபலி” ஜிஎஸ்எல்வி மார்க் -3 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளது. விண்வெளிக்கு செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் 4 பேருக்கும் ரஷியாவின் யூரி ககாரின் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் ஆண்கள், ஆனால் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று விண்வெளித் துறை  தெரிவித்துள்ளது. நான்கு வீரர்களும் 11 மாதங்களுக்கு பயிற்சி பெற உள்ளனர். அவர்களின் பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரஷ்யாவில் 11 மாத பயிற்சியை முடித்தவுடன், விண்வெளி வீரர்கள் நால்வரும் இந்தியாவில் குறிப்பிட்ட பயிற்சியைப் பெறுவார்கள். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4 வது நாடாக இந்தியா மாறும்.

Show More

Related News

Back to top button
Close