தேசம்

பயங்கரவாதிகளை பத்திரமாக அழைத்துச் செல்ல சன்மானம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்த காவல் கண்காணிப்பாளர்கள்!

பயங்கரவாதிகள் இருவரை ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு பத்திரமாக அழைத்துச் செல்ல 12 லட்சம் ரூபாய் சன்மானம் பெற்றதாக காவல் கண்காணிப்பாளர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்ரீநகா் விமான நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவிந்தா் சிங், தனது காரில் லஷ்கா்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி நவீது பாபு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அல்தாஃப் ஆகியோருடன் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். பயங்கரவாதிகள் இருவரும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச் செல்லும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரில் இருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தேவிந்தா் சிங் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரு கைத்துப்பாக்கி, 1 ஏ.கே. ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தேவிந்தர் சிங்கிடம் நடத்ப்பட்ட விசாரணையில், ஜம்முவில் இருந்து டெல்லிக்கும், சண்டிகருக்கும் அழைத்துச் செல்ல பயங்கரவாதிகளிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பயங்கரவாதிகள், குடியரசு தினத்தன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

Show More

Related News

Back to top button
Close