தேசம்

ஊழியர்கள் இல்லாததால் நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல்

டெல்லி திகார் சிறையில், தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஊழியர் இல்லாததால், நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறார் என்பதால் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டார். வினய் குமார், பவன் குமார், முகேஷ்சிங், அக் ஷய் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திகார் சிறையில் தூக்கிலிடும் பணியை செய்யும் ஊழியர் இல்லாததால், குற்றவாளிகள் 4 பேருக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தூக்கு தண்டனை அரிதாக வழங்கப்படுவதால், தூக்கிலிடும் பணியை செய்ய நிரந்தரமாக ஊழியர் நியமிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. திகார் சிறையில் கடைசியாக தூக்கிலிடும் பணியை செய்து வந்த நபரை, திகார் சிறைத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த மாதத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பதால், உத்தர பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தூக்கிலிடும் நபரை தேடி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related News

Back to top button
Close