தேசம்

தொடர்ந்து நிகழும் ஆழ்துளை கிணற்று சோகம் : மீண்டும் ஒரு சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில் 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா கிராத்தில் ஆழ்துளை கிணற்றில் சிறுமி ஒருவர் தவறி விழுந்தார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிறுமி 50 அடி ஆழத்தில் சிக்கியதால், ஆழ்துளை கிணறுக்கு அருகில் குழிதோண்டி சிறுமியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  சுமார் 10 மணி நேர மீட்பு பணிக்குப் பிறகு சிறுமி மீட்கப்பட்டார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close