வானிலை

10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : அதிகப்பட்சமாக 87.8 டிகிரி வெப்பநிலை இருக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

நாளை மற்றும் நாளை மறுநாள்  கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை,ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய 19 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என புவியரசன் கூறினார்.மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாமென அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்ற அவர், நகரில் அதிகப்பட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றார்

Show More

Related News

Back to top button
Close