தாய்மை குழந்தை நலன்லைஃப் ஸ்டைல்

குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க ஆசைப்படும் பெற்றோர்கள் கவனத்திற்கு!

புதிதாய் பெற்றோர் ஆனவர்கள் தங்கள் குழந்தையை நினைத்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாது இருப்பினும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அறிவுரைப்படி குழந்தையை வளர்க்க தொடங்குவார்கள்.ஆரம்பத்தில் எளிதாய் இருப்பது போல் தோன்றினாலும் நாட்கள் செல்ல செல்லத்தான் குழந்தை வளர்ப்பு எவ்வளவு கடினம் என்பதை உணருவார்கள்.

அனைத்து பெற்றோர்களுமே தங்கள் குழந்தையை அன்பாகவும், ஒழுக்கமாகவும் வளர்க்க வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஆனால் ஒழுக்கமாய் வளர்க்க அவர்கள் குழந்தைகளை சில விஷயங்களுக்கு கட்டாயப்படுத்தும்போது அது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைப்பருவம் முதலே சொல்லி தரும்போது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அவற்றை பின்பற்றுவது கடினமாய் இருக்காது. இங்கே குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சொல்லித்தர வேண்டிய சில பழக்கவழக்கங்களை பார்க்கலாம்.

சிறியவர் முதல் பெரியவர் முறை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது உடற்பயிற்சி. பெரும்பாலான குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தனியாக  செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களின் ஓட்டமும். விளையாட்டுமே சிறந்த உடற்பயிற்சியாய் அமைந்துவிடும். விளையாட்டாய் மட்டுமில்லாமல் உடற்பயிற்சி சொல்லிக்கொடுத்து பெற்றோர்களும் குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்வது அவர்களை இன்னும் ஊக்கமடைய செய்யும். ஏனெனில் குழந்தைகளின் உலகமே பெற்றோர்கள்தான் அவர்களும் சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும்போது அது அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். அவர்கள் சரியாக செய்யும்போது பாராட்ட மறந்துவிடாதீர்கள்.

குழந்தைகள் ஏதேனும் குறும்பு செய்தால் அதை “செய்யாதே ” என்று கண்டிக்காமல் அதன் விளைவுகளை பொறுமையாக எடுத்துக்கூறவேண்டும். அதேபோல் ஏதேனும் பொருட்கள் கேட்டால் “இல்லை” என்று கூறாமல் அது அவசியமா இல்லை அவசியமற்றதா என்று எடுத்துக்கூறுங்கள். ஏனெனில் உங்களின் அதீத கண்டிப்பு அவர்களிடையே எதிர்மறை எண்ணங்களை வளர்க்கக்கூடும்.

இது நம்மில் பலருக்கும் நம் பெற்றோரிடம் இருந்து கிடைக்காத ஒன்று. எனவே நிச்சயம் உங்கள் குழந்தைக்கு சுதந்திரம் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அவர்களின் தேவையை அறிந்து அதை தேர்வு செய்யும் உரிமையை கொடுங்கள். அவர்களின் ஆடை, பொழுதுபோக்கு, விடுமுறை பயணம் என எதிலும் உங்கள் எண்ணத்தை அவர்கள் மீது திணிக்காதீர்கள். இது அவர்களின் முக்கியத்துவத்தை அவர்களை உணரச்செய்வதோடு அவர்கள் மீது உங்களுக்குள்ள அக்கறை மற்றும் நம்பிக்கையை அவர்களுக்கு புரியவைக்கும். அதுவே அவர்களை தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ளும்.

உங்களின் வேலையை காரணம் காட்டி உங்கள் குழந்தையுடன் நேரம் செலவழிப்பதை தவிர்க்காதீர்கள். ஏனெனில் இந்த வயதில் அவர்கள் விரும்புவது உங்களின் அன்பையும், இருத்தலையும்தான். விடுமுறை, பண்டிகை நாட்கள் என உங்களுக்கு கிடைக்கும் நேரம் அனைத்தையும் அவர்களுடனேயே செலவிடுவது அவர்களை தனிமையாய் உணரச்செய்யாது.

விவாதம் எழும் சூழ்நிலையில் அவர்கள் சிறியவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் முடிவை நிராகரிக்க வேண்டாம். அவர்களுடன் சமாதானமாய் பேசி அவர்களின் முடிவு தவறாக இருந்தால் அதன் பாதகங்களை உணரச்செய்யுங்கள். உங்கள் அன்பு ஒன்றுதான் அவர்களை கட்டுப்படுத்தும் மந்திரம்.

Show More

Related News

Back to top button
Close