தேசம்

12 பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் : நிர்மலா சீதாராமன்

சீனாவில் இயங்கி வரும் 12 பன்னாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீர்செய்ய அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான வரி அண்மையில் 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவிவரும் வர்த்தகப்போர் காரணமாக சீனாவில் இயங்கி வரும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீர்த்திருத்தங்களின் காரணமாக சீனாவில் இயங்கி வரும் 12 பன்னாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Show More

Related News

Back to top button
Close