விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னை வந்து இறங்கினர் !

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி 20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டியில் பங்கேற்று வருகிறது.இந்திய அணி டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.அடுத்து மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறது.

இதனையடுத்து முதல் ஒரு நாள் போட்டி வருகிற 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பலரிரவு போட்டியாக சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெறவிருக்கிறது.

இந்நிலையில்  இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்களை தங்கவைத்துள்ளனர். இன்று காலை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், மாலையில் இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

சென்னைக்கு வந்ததை அடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சென்னைக்கு வந்துள்ளதாக பதிவேற்றுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close