தேசம்

ஜல்லிக்கட்டு குழு அமைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும்,  அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற கிளையில் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நேற்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுரை என 2 குழுக்கள் அமைக்கப்படும், இந்த குழு நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தும் என தீர்ப்பளித்தது. அதன்படி ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் நியமிக்கப்பட்டார். இதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவையும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு நடத்த வேண்டும் என்றும், அறிவுரை குழு உறுப்பினர்களாக 36 பேரை நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்கான விதிமுறைகள் அனைத்தும் அலங்காநல்லூருக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்  ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக ஏ.கே.கண்ணன் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Show More

Related News

Back to top button
Close