ஆன்மிகம்

ஜனவரி 14 இன்றைக்கான ராசிப்பலன்!

மேஷம்;

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாகவே அமையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும்.குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சில் நிதானம் தேவை. மற்றபடி உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள். என்றாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகள் உண்டாகலாம்.

ரிஷபம்;

நாள் இனிமையான நாள் ஆகும். செய் தொழிலில் மேன்மை அடைவீர்கள் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மூத்தவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு பல நல்ல நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாக வாய்ப்பு உண்டு.

மிதுனம்;

இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். வார்த்தையில் நிதானம் தேவை. பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும்.மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்குவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றில் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். அல்லது ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம் நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும்.

கடகம்;

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் என்றாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு தீர வாய்ப்பு உள்ளது. வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். முருகப் பெருமான் வழிபாடு உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலான கவனம் தேவை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

சிம்மம்;

இன்றைய நாள் நன்மை தரும் நாள் ஆகும். பிற்பகலுக்கு மேல் எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாலையில் நல்ல செய்திகள் கிடைக்கும்.புதிய வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வி நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியடையும்.

கன்னி;

இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பாராத தனவரவு உண்டாகும்.ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்

துலாம்;

இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். விசா தொடர்பான காரியங்களை துவங்குவதற்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். கல்வி நன்றாக இருக்கும். உயர் கல்வியை நோக்கி வெளிநாடு செல்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். விநாயகப் பெருமானின் வழிபாடு விக்கினங்களை தீர்த்து வெற்றியைத் தரும்.

விருச்சிகம்;

இன்றைய நாள் மிகச்சிறந்த நாளாக இருக்கும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும்.ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். வெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் ஆதாயம் தருவதாக அமையும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும். இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது வரலாம். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடியும்.

தனுசு;

இன்றைய நாள் மிகச்சிறந்த நாளாக இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். என்றாலும் சற்றுக் கூடுதலான முயற்சிகள் தேவைப்படும்.சீருடை பணியாளர்கள் பத்திரிக்கை துறை எழுத்துத் துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் உங்கள் வேலையை திறம்படவும் வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள்.

மகரம்;

இன்றைய நாள் சுமரான நாளாக தான் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். என்றாலும் சற்றுக் கூடுதலான முயற்சிகள் தேவைப்படும்.சீருடை பணியாளர்கள் பத்திரிக்கை துறை எழுத்துத் துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் உங்கள் வேலையை திறம்படவும் வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள்.

கும்பம்;

நாள் மிகச் சிறந்த நாளாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் இவற்றில் வெற்றி உண்டாகும். உடன்பிறந்தவர் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மீனம்;

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாள் ஆகும்.நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

Show More

Related News

Back to top button
Close