தமிழ்நாடு

ஜேப்பியார் குழுமத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த ஜேப்பியார், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார். சென்னையில் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளை நடத்தி வந்தார். ஜேப்பியார் மறைவுக்குப் பிறகு அவரது மகள் மற்றும் மருமகன்கள் கல்லூரிகளை கவனித்து வருகின்றனர். இந்தக் குழுமத்துக்கு சொந்தமாக, சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரி, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் துறைமுக அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு இதே குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 கோடி ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related News

Back to top button
Close