அரசியல்

செய்தியாளர் அன்பழகன் கைது! – வைகோ கண்டனம்

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிகையாளர் வி.அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். தமிழக அரசுக்கு விரோதமான செய்திகள் அடங்கிய புத்தகங்கள் அங்கு இடம்பெற்று இருப்பதாகக் கூறி, செய்தி அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறை காலி செய்ய வைத்தது.

இன்று அதிகாலையில் பத்திரிகையாளர் அன்பழகன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பத்திரிகையாளர் அன்பழகன் மீது போடப்பட்ட வழக்கை தமிழக காவல்துறை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close