தமிழ்நாடு

ஃபாத்திமா லத்தீப் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னை ஐஐடியில் 2வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஐஐடியில் முதுநிலை மானுடவியல் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான 3 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் நேரில் சென்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவி ஃபாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் அவர்கள், ஃபாத்திமா லத்தீப் தற்கொலை உள்ளிட்ட ஐஐடி மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related News

Back to top button
Close