தேசம்

டெல்லியில் நடைபெறுகின்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரி ஒழுங்காற்று குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில் நடைபெற்றும் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகளின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்டுகிறது. இதனடிப்படையில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளை பிறபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related News

Back to top button
Close