தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் வேலைப்பாடுகள் தீவிரம்

காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பதிவுக்கான நேரம் பற்றி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதேபோல் ஊராட்சிளில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டின் வண்ணமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவில் பிங்க் வண்ண வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவில் பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 9 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்ற வகையில் அச்சிடப்பட உள்ளது. தமிழ் அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்பட்டு அவரது பெயருக்கு அருகே தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டு இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close