சினிமாஸ்பெஷல்

கேபிள் டிவியில் தர்பார் படத்தை ஒளிபரப்பியவர்கள் மீது லைகா நிறுவனம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது!

மதுரை மற்றும் திருச்சியில், கேபிள் டிவியில் தர்பார் படத்தை ஒளிபரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான லைகா கேட்டுக்கொண்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் மதுரையில் உள்ளூர் கேபிள் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டதாக ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியை சேர்ந்த விஜய் என்பவர் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டம் சிந்துபட்டி பகுதியில் உள்ளூர் கேபிள் சேனலில் தர்பார் படம் ஒளிபரப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று திருச்சி உள்ளூர் கேபிள் டிவியிலும் தர்பார் படம் ஒளிபரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்‌பாக மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள லைகா நிறுவனம், உள்ளூர் சேனல்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related News

Back to top button
Close