தேசம்

மகாராஷ்டிராவில் 2 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அம்புஜ்மத் என்ற இடத்தில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நக்ஸல் தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனை முறியடித்த போலீசார் நடத்திய எதிர்த் தாக்குதலில் இரு நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இறந்தவர்கள் மக்கள் விடுதலைக்கான கொரில்லா ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Show More

Related News

Back to top button
Close