தமிழ்நாடு

எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன் : கமல்ஹாசன்

ரஜினிக்கு சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும், தக்க கவுரவம் தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த விழாவில் நாசர், மணிரத்னம், கே.எஸ். ரவிகுமார், ரமேஷ் அரவிந்த், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், கமல் அரசியலுக்கு வந்தாலும், அவரது தாய்வீடான திரையுலகை கைவிடமாட்டார் என்று கூறினார். தன்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு எல்லாமே பாலச்சந்தர் தான் என்றும், தனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன் என்றும் ரஜினி பெருமையுடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், முன்பு ஆசைப்பட்டதை எல்லாம் மனிரத்னமும் தானும் திரையுலகில் செய்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். ரஜினி சினிமாவிற்கு வந்த முதல் வருடத்திலேயே ஐகான் ஆகிவிட்டார் என்றும், 44 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ஐகான் விருது கொடுத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தனக்கும், ரஜினிக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கலாம், ஆனால் எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சிலை திறப்பு விழாவில் பேசிய வைரமுத்து, ஒரு தகப்பனாக, கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன் என்று கூறினார். பாலச்சந்தருக்கு தாம் பாட்டு எழுதிய அனுபவங்களை விவரித்த அவர், பாலச்சந்தர் சிலையை கமல் வைத்ததில் ஒரு குறியீடு இருக்கிறது என்றார். வாழ்வில் தன்னை யார் மேம்படுத்தினாரோ, அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை இந்த கலை உலகம் உணர வேண்டும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.

Tags
Show More

Related News

Back to top button
Close