அரசியல்

பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைப்பது, வழுக்கு மரத்தில் காலூன்ற நினைப்பது போன்றது : மல்லை சத்யா

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற நினைப்பது, வழுக்கு மரத்தில் காலூன்ற நினைப்பது போன்றது என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

உலகப் பொது முறை தந்த அய்யன் திருவள்ளுவரின் 2051 வது பிறந்தநாளை முன்னிட்டு மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் 70 அடி மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவரும், மதிமுக துணை பொதுச்செயலாளருமான மல்லை சத்யா, நிர்வாகிகளுடன் அந்த சிற்பத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா சதுப்பு நிலத்தில் உழன்று கொண்டிருப்பதாக கூறினார்.

திருவள்ளுவரின் 70 அடி மணல் சிற்பத்தை இந்தியாவின் தலைசிறந்த சிற்பிகளான பாஸ்கர், முருகன் மற்றும் கட்டிட கலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து 10 நாட்களில் உருவாகினர். இந்த மணல் சிற்பத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழச்சி, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி ஜி சந்தோசம் தலைமையில் நடைபெற்றது. ஒடிசா மாநில முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் பாலகிருஷ்ணன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சந்திரசேகர், மாமல்லபுரம் அரசு கட்டிட கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், பேராசிரியர் ராஜேந்திரன், அப்துல் அமித், ஜெகன் நாதன், இளையராஜா, பெருமாள் உள்ளிட்டோர் மணல் சிற்பத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Show More

Related News

Back to top button
Close