அரசியல்

தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல : மாஃபா பாண்டியராஜன்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, விருப்ப பாடம் தான் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரஞ்சு, இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, விருப்ப பாடம் தான் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு எனவும், மாணவர்கள் விருப்ப பாடத்தை எழுதி கொடுத்து தேர்வு செய்வதாகவும் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மொழிப்பிரச்சினையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து, தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

Show More

Related News

Back to top button
Close