அரசியல்

தலைவர்களில் ஆளுமை மிக்கவர் வைகோ தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் உள்ள தலைவர்களில், ஆளுமை மிக்கவர் வைகோ-தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டும் என வைகோ, மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஆளுமை திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பார் என்றால் அவர் வைகோ தான் என கூறினார். எனவே அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Show More

Related News

Back to top button
Close