அரசியல்

குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்துகொள்ள மறுப்பதாக மோடி சாடல்!

குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்துகொள்ள மறுத்து, மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி கொல்கத்தாவின் ஹவுரா நகரின் பேளூர் மடத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர், அவரது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்கள் புரிந்து கொண்டிருந்தாலும், சிலர் வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுப்பதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது எனத் தெரிவித்த அவர், சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.

மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் மத சிறுபான்மையினர் பல துன்பங்களை அனுபவிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அந்த நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த சட்டத்தை சிலர் வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்து, மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close