உறவுகள்லைஃப் ஸ்டைல்

பழைய உறவுகளை இழப்பதற்கு புதிய உறவு தான் காரணமா?

இக்காலத்தில் உள்ள உறவுகள் பெரும்பாலும்  பிரிவதற்கான  காரணம் புதிய உறவு கிடைப்பது தான்.ஆரம்பத்தில் தனது உயிருக்கு உயிராக நேசிக்கப்படும் உறவுகள் இறுதியில் நீ எப்படி போனா எனக்கென்ன என்ற நிலைமைக்கு ஆளுக்கு ஒரு திசையில் செல்கின்றன.இதற்கு என்ன தான் காரணம் என்று பார்க்கும் போது பழைய உறவு தரும் அலட்சியமும்,நேரம் செலவின்மை , புரிந்துக் கொள்ளாமை , புதிய உறவு தரும் புது அன்பு போன்ற காரணங்களும் அடங்கும்.

புதிய உறவு என்பது காதல்,நட்பு,அண்ணன்,தம்பி,தங்கை என போன்றவை ஆகும்.காதல் உறவை பாதுக்காப்பது மட்டும் முக்கியமில்லை.நட்பு வட்டாரத்தையும் முக்கியமாக பாதுக்காக்க வேண்டும்.அனைத்து உறவுகளுக்குள்ளும் அன்பு,பொறாமை,கோவம்,தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும்  தன்மை போன்றவை கட்டாயம் இருக்கும்.

உறவுக்குள் பெரும்பாலும் சண்டை வருவது தனது அன்புக்குரியவர்களை புரிந்துக்கொள்ளாமை தான்,அடுத்ததாக எங்கே தன்னை விட்டு சென்று விடுவார்களோ என அவர்களை தனது கட்டுக்குள்ளே வைத்திருப்பது , இவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கும் உறவு ஒரு நாள் கண்டிப்பாக சிறகை விரித்து பறக்கத் தான் ஆசைப்படும்.

அளவற்ற அன்பும் அரவனைப்பும் எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதோ அதை அன்பு தன்னை விட்டு நீங்கும் போது அளவற்ற வருத்ததையும்,சோகத்தையும் விட்டுச் செல்கிறது.

தனது அன்புக்குரியோர்களின் விருப்பத்தை புரிந்துக் கொண்டு எவர் ஒருவர் அவ்விருப்பத்தை தனது விருப்பத்தோடு அனுமதிக்கிறார்களோ அவர்களை விட சிறந்த ஜோடி எவருமில்லை.

சுதந்திரம் என்பது  நாட்டுக்கு மட்டும் இருந்தால் போதாது வீட்டுக்குள்ளேயும் உறவுக்குள்ளேயும் கண்டிப்பாக இருந்தால் வீடும் நலமாக இருக்கும்.

Show More

Related News

Back to top button
Close