ஆன்மிகம்

நவம்பர் 29 இன்றைக்கான ராசிப்பலன்

மேஷம்;

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாராக தான் இருக்கும்.குடும்பத்தினரிடேயே இருக்கும் பிரச்சினைகள் சுமுகமாக தீர்வு எட்டப்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஒரு சில பொருளாதாரப் பற்றாக் குறைகள் இருந்தாலும் திறம்பட சமாளித்து அவற்றில் வெற்றி அடைவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆயில் அண்ட் கேஸ் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்;

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சிப் பொங்கும்.வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைப்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இவைகளில் வெற்றி பெறுவீர்கள் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நாள் ஆகும்.

மிதுனம்;

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும்.கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சினைகள் தீரும். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அனுபவிப்பார்கள். ஆராய்ச்சிப் படிப்புகளில் இவ்வளவு நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்குவதற்கான வாய்ப்பு உண்டு. தேவையான பண உதவி கிடைக்கும். வழிகாட்டிகளின் உடைய உதவிகள் சரியான முறையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடகம்;

இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களில் நன்மை உண்டாகும். படிப்பை முடித்து வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சிம்மம்;

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பந்தம் உறுதிப்படும்.தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புக் கிடைக்கும்.அலுவலகத்தில் பணிப்புரிவோர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

கன்னி;

இன்று உங்களுக்கு நன்மையை அளிக்கக்கூடிய நாளாக இருக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்,குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வாகனம் தொடர்பான விஷயங்களில் யோசித்து செயல்படுதல் நல்லது.

துலாம்;

இன்றைய நாள் சிறந்த நாளாகும் உடல். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வகையில் சுபச் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களை திட்டமிடுவீர்கள். இவற்றிற்காக ஒரு சிலருக்கு கடன் படக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்;

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்னாளாக அமையும். . மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் உயர்கல்வி வடிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.

தனுசு;

இன்று நீங்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் எதிர்பார்த்த பணம் வரும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்தவர்கள் அவைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும். ஓரிரு நாட்களில் வெற்றி உண்டாகும்.

மகரம்;

இன்றைய நாள் உங்களுக்கு சுமராக தான் இருக்கும்.கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் நன்றாக இருந்துவரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்;

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டு. உங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்தாலோசிக்க இன்று நல்ல நாள் ஆகும்.

மீனம்;

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவுப்பொருட்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

தங்களது தொழிலில் மிகுந்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். படிப்பை முடித்து தொழிலுக்காக அல்லது வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தீர்வுகள் ஏற்படும் அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும். என்பதால் உங்கள் வார்த்தையில் கவனம் தேவை.

Show More

Related News

Back to top button
Close