ஆன்மிகம்

நவம்பர் 30 இன்றைக்கான ராசிப்பலன்

மேஷம்;

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்குவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றில் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். அல்லது ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.

வார்த்தையில் நிதானம் தேவை பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும். வழக்கு விஷயங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள் அவர்கள் வெற்றி அடைவர்.

மிதுனம்;

இன்றைய நாள் மிகச்சிறந்த நாளாக அமையும். சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உண்டு என்பதால் இவைகளில் கவனம் கொள்ளவும். செய் தொழிலில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மூத்தவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு.

கடகம்;

இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாகவே அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை மற்றபடி உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள், என்றாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

சிம்மம்;

வாழ்க்கையில் முன்னேற்றமான நாளாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் எல்லா புது முயற்சிகளும் வெற்றியடைய இறையருள் துணை நிற்கும். விநாயகப் பெருமானின் வழிபாடு விக்கினங்களை தீர்த்து வெற்றியைத் தரும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும் விசா தொடர்பான காரியங்களை துவங்குவதற்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும்.

கன்னி;

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையே வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு ஒன்று சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.

துலாம் ;

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாலையில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் நாளை வந்து சேர வாய்ப்பு உண்டு.

விருச்சகம்;

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சீருடை பணியாளர்கள் பத்திரிக்கை துறை எழுத்துத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் உங்கள் வேலையை திறம்படவும். வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள்.

தனுசு;

நண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும். இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.

மகரம்;

இந்த நாள் இனிய நாள் ஆகும்.  உங்கள் திறமை பளிச்சிடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும்.

கும்பம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். என்ஜினீயரிங் தொடர்பான கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை உங்கள் கண்முன் காண்பீர்கள்.

மீனம்;

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் நிம்மதியான நாடாக என்று இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் மனதில் எழும்.வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்

Tags
Show More

Related News

Back to top button
Close