தமிழ்நாடு

சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை

மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 49 ஆயிரத்து 554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சத்துணவின் பயன் முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தபின் சத்துணவை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிதாக சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும். பயோமெட்ரிக் முறையை காரணம் காட்டி யாருக்கும் உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related News

Back to top button
Close