உலகம்

ஓமன் சுல்தான் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார் அவருக்கு வயது 79.

1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்தார் காபூஸ் பின் சையத். எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற இவர், சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஓமன் திரும்பினார். இந்நிலையில் காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை. இதனால் அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் நாளைக்குள் கூடி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள்.

ஓமன் மன்னர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சுல்தான் காபூஸ் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாகவும், ஓமன் மன்னர் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close