தேசம்

கனமழையால் வெங்காய பயிர்கள் சேதம் : எகிப்து, ஈரான், துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி ?

ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பெருமளவு குறைந்த நிலையில், அதன் விலையோ கணிசமாக உயர்ந்துவிட்டது. பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து, மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஆப்கன், ஈரான், துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. உடனடி தேவையை கருத்தில்கொண்டு, முதல்கட்டமாக 80 கண்டெய்னர்களில் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பிறகு சந்தையில் ஏற்படும் தேவைக்கேற்ப வெங்காயத்தை இறக்குமதி செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வெங்காயத்தின் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related News

Back to top button
Close