அரசியல்

உலகில் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம்

நடிகர் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சிறந்த நடிகர்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தேனியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நல்ல நடிகர்கள் என்றார். அரசியலில் அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் எனக் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படியே நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கோத்தபய ராஜபக்ச அதிபராக தேர்தெடுக்கப்பட்டது குறித்து பேசும்போது, உலகில் எந்த மூலையில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Show More

Related News

Back to top button
Close