தமிழ்நாடு

பாலமேட்டில் உற்சாகத்துடன் நடைபெற்று வரும் விறு விறு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று உழவர்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் விளையாட்டு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றன.  தமிழர்களின் பாரம்பரியத்துக்கும் வீரத்திற்கும் பெயர்போன பகுதி என்றாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும்தான்.  அதனை சங்ககாலம் முதல் சமகாலம் வரையிலும் பல்வேறு விதத்திலும் நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பெருமிதமாகவே கருதப்படுகிறது.

palamedu jallikattu 2020 க்கான பட முடிவு

இந்நிலையில் இன்று பலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை நீயா? நானா? என அதன் எதிரிலேயே நின்று அடக்க முயன்ற காளையர்களை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

palamedu jallikattu 2020 க்கான பட முடிவு

இப்போட்டியில் பங்கேற்றுள்ள 700 காளைகளை அடக்குவதற்காக,  சுமார் 936 வீரர்கள் களத்தில் ஆவேசத்துடன் காத்திருக்கின்றனர். நீதிமன்றத்தின் ஆலோசனைகளின் படி நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள மாடுகளும் வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. காவல்துறை தரப்பிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Show More

Related News

Back to top button
Close