தமிழ்நாடு

பாஸ்போர்ட் வழங்குவதற்கு முதல் தகவல் அறிக்கை தடையில்லை : உயர்நீதிமன்றம்

பாஸ்போர்ட் வழங்குவதற்கு முதல் தகவல் அறிக்கை தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் மீதான காவல்துறை சரிபார்ப்புக்கு சென்றபோது, பிரபாகரன் மீது கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது தெரியவந்தது. அந்த வழக்கில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பாக, பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பிரபாகரன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். எனினும் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து பாஸ்போர்ட் வழங்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து உயர்நீதிமன்றக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பாஸ்போர்ட் வழங்க முதல் தகவலறிக்கை தடையில்லை என கூறினார். மேலும், 2 மாதத்தில் பிரபாகரனின் விண்ணப்பதை ஆராய்ந்து உரிய முடிவை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags
Show More

Related News

Back to top button
Close