அரசியல்

சட்ட திருத்தத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் : ப.சிதம்பரம்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், திமுக எம்.எல்.ஏ. ரகுபதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றார். மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக, மற்ற நாடுகளில் இருப்பது போல முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார். அகதிகளாக யாரை ஏற்கலாம் என்பதை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலாக, சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை சட்டத்தை இந்த அரசு கொண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு என்று அவர் கூறினார். அனைத்து அரசியல் கட்சிகளையும் அறிஞர்களையும் வைத்து கலந்தாலோசித்து, ஆராய்ந்து ஒரு முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வருவதே விவேகமானது எனவும் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

Show More

Related News

Back to top button
Close