தமிழ்நாடு

சிறார் ஆபாச படங்கள் தொடர்பாக 30 பேரிடம் விசாரணை

சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதவிட்டதாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருடைய மெசஞ்சர் குரூப்பில் 300 க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வீடியோக்களை பகிர்ந்து, பதிவேற்றம் செய்ததாக 100 பேரின் தொடர்பு எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , முதற்கட்டமாக 30 பேரிடம் இரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. மேலும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து,பதிவேற்றம் செய்வதாக பல ஐபி அட்ரஸ்கள் சென்னை,செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெண்கள், குழந்தைகள் எதிரான குற்றங்களை தடுக்கும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related News

Back to top button
Close