தேசம்

4 பேரை என்கவுண்டர் செய்த காவல் ஆணையர் விசி சஜ்னாருக்கு குவியும் பாராட்டுகள்

ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆணையர் விசி சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த 2008ம் ஆண்டு வாராங்கல் பகுதியில் பொறியியல் மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீசிய 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அப்போது வாரங்கல் எஸ்.பியாக இருந்தவர் வி.சி.சஜ்னார். இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் வீசி அவர்கள் வாழ்வை சிதைத்த மூன்று பேரையும் என்கவுண்டர் செய்த விவகாரத்தில் அப்போதே சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில்,  தற்போது சைபராபாத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வரும் அதே வி.சி சஜ்னார் தான், பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்தியவர். அவருடைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது. எனவே சஜ்னாருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  2008 என்கவுண்டரின் போதே சில விமர்சனங்கள் எழுந்தாலும், அதே பாணியிலான என்கவுண்டர் ஒன்றை சைபராபாத் போலீசார் அரங்கேற்றியிருப்பதால் சஜ்னார் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Show More

Related News

Back to top button
Close