தேசம்

புதுச்சேரியில் அனைத்து பிளாஸ்டிக் வகைகளுக்கும் தடை

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும், அதன் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், பாரடைஸ் பீச், நோனாங்குப்பம் கடற்கரையிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Show More

Related News

Back to top button
Close