அரசியல்

பாஜக ஆட்சியை விமர்சிக்க மக்கள் அச்சப்படுகிறார்கள்

நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகனாமிக் டைம்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பஜாஜ் குழும தலைவர் ராகுல் பஜாஜ், நாட்டில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில், ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உரிமை இருந்ததாக கூறிய அவர், தற்போது பாஜக ஆட்சியில் உள்ளவர்களை விமர்சிக்க மக்கள் அச்சப்படுவதாகவும் கூறினார். காந்தியை கொன்ற பிரக்யா தாக்கூருக்கு, பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததாக விமர்சித்த ராகுல் பஜாஜ் நாட்டில் நடைபெறும் கும்பல் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு அரசை விமர்சித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அரசை விமர்சிக்க யாரும் அச்சப்பட தேவையில்லை என மேலும், பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் பல்வேறு நாளிதழ்கள் விமர்சித்து வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

Show More

Related News

Back to top button
Close