அரசியல்

இலங்கை வருமாறு ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் உலகத் தமிழர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்த அவர், கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். பயணத்தின் ஒருபகுதியாக நடிகர் ரஜினிகாந்தை, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் நேரில் சென்று சந்தித்தார். அப்போது இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Tags
Show More

Related News

Back to top button
Close