விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்- தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 488 ரன்கள் குவித்தது மும்பை அணி!

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு மும்பை அணிகள் மோதின.முதலில் பேட் செய்த மும்பை அணி ஆட்டத்தின் தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் கேப்டன் ஆதித்ய தாரே தனது 9-வது முதல்தர போட்டி சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு ஷஷாங் அட்டார்தே (58 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தார். தமிழக அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் இருந்த போதிலும் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அபாரமாக ஆடிய ஆதித்ய தாரே 154 ரன்கள் (19 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்து ஆட்டம் இழந்தார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 148.4 ஓவர்களில் 488 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. துஷார் தேஷ்பாண்டே 39 ரன்களுடன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தமிழகம் தரப்பில் சாய்கிஷோர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், டி.நடராஜன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை பொறுமையாக ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 52 ரன்களுடனும் 102 பந்து, 7 பவுண்டரி, சூர்யபிரகாஷ் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Show More

Related News

Back to top button
Close