விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட் – தமிழக அணி கர்நாடகாவிடம் போராடி தோல்வியடைந்தது

86 வது ரஞ்சி கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் கர்நாடக அணிகள் திண்டுக்கல்லில் உள்ள நத்தத்தில் மைதானத்தில் நடைப்பெற்றது.

முதலில் பேட் செய்த கர்நாடகா 336 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாள் முடிவில் தமிழக அணி இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தினேஷ் கார்த்திக் 235 பந்துகளில் 113 ரன்களில் சதத்தை விளாசினார்  16 பவுண்டரி  அடித்த போதிலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற முடியவில்லை. கர்நாடகா சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. இதில் மயங்க் அகர்வால் 8 ரன்களும் , கேப்டன் கருண் நாயர் 5 ரன்களுடனும் வெளியேறினார்கள்.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய கர்நாடகா   65.4 ஓவர்களில் 151 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 4 விக்கெட்டும், கே.விக்னேஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தமிழக அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய தமிழக அணி முதல் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் திரட்டியது. இதனால் தமிழக அணி சுலபமாக இலக்கை அடைந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்க ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. முரளிவிஜய் 15 ரன் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 42 ரன்னில் கேட்ச் ஆனார். சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம், தமிழக பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். கேப்டன் விஜய் சங்கர் 5 ரன், பாபா அபராஜித் 0, தினேஷ் கார்த்திக் 17 ரன் அவரது சுழலில் சிக்கினர்.154 ரன்களிலே தமிழக அணி முடங்கிய நிலையில் கர்நாடக அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தியது. தமிழக அணி போராடி தோல்வியடைந்தது.

Show More

Related News

Back to top button
Close