விளையாட்டு

தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடிக்கத் திட்டம் : கேப்டன் ரோஹித் சர்மா

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்கள் அடிக்கத் திட்டமிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ராஜ்கோட்டில் நேற்று போட்டி முடிந்தவுடன், பிசிசிஐ சார்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ரோஹித் சர்மாவை பேட்டி எடுத்தார். அப்போது, தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்தபோது, ஆறு சிக்ஸர்களை அடிக்க எண்ணியதாக கூறினார். ஆனால் நான்காவது சிக்ஸரைத் தவற விட்ட பிறகு சிங்கிள்ஸ் எடுக்க முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார். பலசாலியாக இருந்துதான் சிக்ஸர் அடிக்க முடியும் என்பதில்லை, நீங்கள் கூட சிக்ஸர் அடிக்கலாம் என சாஹலிடம் அவர் கூறினார். 2017, 2018-ம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் ரோஹித் சர்மா. 2017-ல் 65 சிக்ஸர்களும் 2018-ல் 74 சிக்ஸர்களும் அடித்துச் சாதனை செய்துள்ளார். அதேபோல இந்த வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கிற பெருமையை ரோஹித் சர்மா அடைந்துள்ளார். இந்த வருடம் 66 சிக்ஸர்கள் அடித்து அவர் முதலிடத்தில் உள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close